டிவிட்டரில் மோடியின் 60 சதவீதம் ஃபாலோயர்ஸ் போலிகள்

0
409

உலக அளவில் டிவிட்டர் , பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் தலைவர்களை பின் தொடர்பவர்கள் அதிகம் . டிவிட்டரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் காட்டிலும், பிரதமர் மோடிக்கு போலியாக கணக்குவைத்து பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) அதிகம் என்று டிவிட்டர் ஆடிட்டில் (Twitteraudit) தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்புகள், அரசுகள் தங்கள் டிஜிட்டல் தளத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டிவிப்லமேசி (Twiplomacy) உதவி செய்யும் . டிவிப்லமேசி (Twiplomacy), டிவிட்டர் கணக்கு குறித்து தணிக்கை செய்யும் டிவிட்டர் ஆடிட் (Twitteraudit) உதவியுடன் உலகத் தலைவர்களை டிவிட்டரில் பின்தொடர்பவர்களில் எத்தனை சதவீதம் போலி, உண்மை என்பது குறித்து அறிந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி

டிவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என டிவிப்லமேசி (Twiplomacy) தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை டிவிட்டரில்  4 கோடியே 89 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர் பின்தொடர்கிறார்கள் . ஆனால், இதில் ஒரு கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 426 பேர் மட்டுமே உண்மையானவர்கள், மீதமுள்ள 2 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 527 பேர் போலியானவர்கள் என்று டிவிப்லமேசி (Twiplomacy) தெரிவித்துள்ளது . இவருடைய ஆடிட் மதிப்பு 39.

Screen Shot 2018-03-14 at 4.28.36 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

உலகம் முழுவதும் டிவிட்டரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பின்தொடர்பவர்கள் 4 கோடியே 89 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர். ஆனால், உண்மையில் டிரம்பை பின்தொடர்பவர்களில் 37 சதவீதம் பேர் போலியான கணக்கு உடையவர்கள் என டிவிப்லமேசி (Twiplomacy) தெரிவித்துள்ளது. டிரம்பை பின்தொடர்பவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 870 பேர் மட்டுமே உண்மையான கணக்கு உடையவர்கள். மீதமுள்ள ஒரு கோடியே 24 லட்சத்து 45 ஆயிரத்து 604 பேர் போலியான கண்க்குடையவர்கள் . இவருடைய ஆடிட் மதிப்பு 74 .

Screen Shot 2018-03-14 at 4.29.27 PM

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 31 சதவீதம் போலியானது. ராகுல் காந்தியை பின்தொடர்பவர்கள் 6,157,308 பேர். இவர்களில் 36 லட்சத்து 96ஆயிரத்து 460 பேர்   போலி கணக்கு உடையவர்கள் எனவும்,  17 லட்சத்து 15 ஆயிரத்து 634 பேர் மட்டுமே உண்மையானவர்கள் என டிவிப்லமேசி (Twiplomacy) தெரிவித்துள்ளது. இவருடைய ஆடிட் மதிப்பு 31.

Screen Shot 2018-03-14 at 4.28.07 PM

போப் ஃபிரான்ஸிஸ்

போப் ஃபிரான்சிஸை டிவிட்டரில் பின் தொடர்பவர்களில் 59 சதவீதம் போலியானவர்கள் . இதில் 87.56 லட்சம் பேர் உண்மையான கணக்கு வைத்து இருப்பவர்கள் என்றும், 80 லட்சம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள் என டிவிப்லமேசி (Twiplomacy) தெரிவித்துள்ளது. . இவருடைய ஆடிட் மதிப்பு 52.

Screen Shot 2018-03-14 at 4.30.15 PM

நன்றி : The Week

இதையும் படியுங்கள் : நீங்கள் குரங்கணி-கொழுக்குமலை பாதையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்