குழந்தைகளில் உடல் வளர்ச்சிக்கு டிரை ஃப்ரூட்ஸ் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று டிரை ஃப்ரூட்ஸ் வைத்து சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான டிரை ஃப்ரூட் கீர்தேவையான பொருட்கள்

காய்ச்சாத பால் – 1 லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம் – கைப்பிடியளவு
முந்திரி – கைப்பிடியளவு
பிஸ்தா – கைப்பிடியளவு
வால்நட் – கைப்பிடியளவு
உலர்திராட்சை – கைப்பிடியளவு
உலர் அத்திப்பழம் – கைப்பிடியளவு

செய்முறை

பாதாமுடன் முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர்திராட்சை, உலர் அத்திப்பழம் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு பாதாம், பிஸ்தாவின் தோலை நீக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

சிறிதளவு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து ஊறவைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி அடுப்பை சிறுதீயில் வைத்து காய்ச்சவும்.

இதனுடன் அரைத்த நட்ஸ் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இதனுடன் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்களுக்கு பிறகு இறக்கவும்.

இதை சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here