டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மதுரைக்கு வருகிறார். அவர் வருகையையொட்டி இந்த #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் முதலிடத்தில் டிரெண்டாகி இருக்கிறது.

#GoBackModi, #GoBackSadistModi என்று டிவீட் செய்து வரும் ஒவ்வொருவரும் தமிழகத்திற்கு ஏன் மோடி வரக்கூடாது என்பதற்கு ஒவ்வொரு காரணங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்கள்.

பிரதமரின் பட்டபடிப்பு – ரகசியம் ; ரஃபேல் ஹெலிகாப்டர்களின் விலை – ரகசியம்; கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியல் – ரகசியம்; பிரதமரின் திருமணம் – ரகசியம் ; வேலையின்மைப் பற்றிய பட்டியல் – ரகசியம்; 2014 ஆம் ஆண்டு மோடி அரசு அமைக்கும் போது அதித நம்பிக்கை ; 2019 மோடி ஆட்சி வரவே வராது

இது பெரியார் மண்; ஆர் எஸ் எஸ் , பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு இங்கு இடமில்லை.

கொலைகார ஸ்டெர்லைட்ட்டின் ஏஜண்ட் மோடி இங்கு வரவேண்டாம்

#GoBackModi -ஹேஷ்டெகை டிரெண்ட் பண்ணாதீங்க, கஜா புயலினால் மக்கள் கஷ்டப்படும்போது மோடி எவ்வளவு கஷ்டப்பட்டு பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கு சென்றார்.

பணமதிப்பிழப்பு , பொய் வாக்க்குறுதிகள்,ரஃபேல் ஊழல், 4G ஊழல், விவசாயக் கடனில் ஊழல், வேலையின்மை, பட்டினி, சிபிஐ, ஆர்பிஐ -யை சிதைத்தது, கோயில் அரசியல் உண்மையான இந்திய குடிமகன் ஒருவரும் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டாங்க.

https://twitter.com/jerry_sundar/status/1089340512664842240

மததீவிரவாதத்தை ஊக்குவிக்கும் மோடி, கார்பரேட் நிறுவனங்களுக்கு (ஸ்டெர்லைட்) உதவி செய்யும் மோடி வரவேண்டாம்

இதுவரை மீடியாக்களை சந்திக்காத திமிர்பிடித்த மோடிக்கு எதிராக போராடும் தமிழக மக்களுக்கு நன்றி

https://twitter.com/Tanisha_Khanna9/status/1089361090235060224

பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல் மோடிக்கு எதிராக போராடும் தமிழக மக்களிடம் மற்ற மாநில மக்கள் கற்று கொள்ள வேண்டும்

கஜா புயல் பாதிப்பின் போது வராத மோடி இப்போது எதுக்கு வர்ரீங்க

தமிழக மக்கள் தற்போது இப்படித்தான் இருக்காங்க

நீட் அறிமுகத்தால் அனிதாவின் மரணத்தை மறக்க முடியுமா ?

https://twitter.com/KknKv1994/status/1089369130820526081

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here