அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின்வேட்பாளரான ஜோ பிடனும் கார சார விவாதங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் டிரம்புக்கும் அவரது மனைவியான மெலனியாவிற்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக டிரம்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை உடனடியாக தொடங்குகிறோம். இருவரும் இணைந்து இதனை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தானும் தனது மனைவியும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஹோப் ஹிக்ஸ் எனும் உதவியாளருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.