காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

– இவ்வாறாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆனால், இதனை மறுக்கிறது இந்தியா.

அழைக்கவில்லை

அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா அமெரிக்காவை வேண்டவில்லை. பாகிஸ்தானுடனான அனைத்து விவகாரத்தையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here