வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு இன்று சிங்கப்பூரில் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற து.

இந்த உச்சிமாநாடு தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், அமெரிக்கா – வடகொரிய ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புதிய உறவை ஏற்படுத்தவும், கொரிய தீபகற்பத்தில் நிலையான, அமைதியான ஆட்சியை நிலைநாட்டவும், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே விரிவான, மற்றும் மிக ஆழமான கருத்து பரிமாற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய அம்சங்கள் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை

DfeKMDyVAAANUYu

1.அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி
மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

2.கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை
எடுக்கும்.

3.ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய
தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

4.அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள்
ஒப்பந்தம் செய்துள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்