அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி தெரிவித்தார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ”அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

பிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த கருத்தை நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

நான்சி பெலோசியின் மேற்கூறிய கருத்துக்கள் வெளிவருவதற்கு சற்று முன்னர் தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ”என் மீது நீங்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், அதனை விரைவாக, உடனடியாக கொண்டு வாருங்கள். அப்போதுதான் செனட்டில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பு இருக்கும். நாட்டு மக்களும் தங்களின் வழக்கமான கடமையை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நவம்பர் மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த தீர்மானத்தில் டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது விவரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் நாட்டில் ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹன்டார் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் ‘இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று முன்னதாக தெரிவித்தார்.

பெரும் சர்ச்சயை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், டிரம்ப் தனது பதவியைதவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன்ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்குஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர்குற்றம் சாட்டினர். மேலும், இந்தவிவகாரத்தில் டிரம்பை பதவிநீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சிஎம்.பி.க்கள் தொடங்கினர்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் இருந்து மறுத்து வரும் டிரம்ப், இந்த பதவி நீக்க விசாரணை எதிர்க்கட்சியினரின் சூனிய வேட்டை என விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here