டிரம்புக்கு எதிராக வாக்களிக்களியுங்கள் : அமெரிக்க நகரங்களில் திரண்ட பெண்கள்

Turnout was far lower than the massive crowds following President Trump's inauguration, but the message largely remained the same. "I'm a 22-year-old woman. I think my future's at stake. I don't want to see Donald Trump reelected," said protester Teri Long.

0
119

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் மரணம் அடைந்த நிலையில் அந்த பதவிக்கு எமி கோனி பேரட் என்பவரை நியமிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக செனட்சபையின் ஒப்புதலை பெற்றதுடன்

அதிபர் தேர்தலுக்கு முன்பு பேரட்டை நியமனம் செய்ய டிரம்ப் முடிவெடுத்துள்ளார். 

இந்நிலையில், மறைந்த நீதிபதி கின்ஸ் பர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், எமி பேரட்டின் நியமன முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நகரங்களிலும் பெண்கள் சார்பில் மகளிர் பேரணி நடைபெற்றது.

இதில் வாஷிங்டன் டி.சி.யில் பிரீடம் பிளாசாவில் இருந்து நேசனல் மால் வரையிலான பகுதியில் பேரணியாக சென்ற பெண்கள் எமி வெளியேற வேண்டும். வலிமையான பெண்கள் என்ன செய்து விடுவார்களோ என்று எங்களை கண்டு நீங்கள் அச்சமடைந்துள்ளீர்கள். அதனால் எங்களை பயங்கரவாதிகள் என கூறுகிறீர்கள். இந்த தேர்தலில் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

நடப்பு ஆண்டில் நடைபெறும் அதிபருக்கு எதிரான 2வது பேரணி இதுவாகும். கடந்த ஜனவரியில் இதுபோன்ற மகளிர் பேரணி ஒன்றுநடந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு முதன்முறையாக மிக பெரிய அளவில் மகளிர் பேரணி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here