ஐடிஐ படித்தவர்களுக்கு சார்ஜாவில் வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :

சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உள்வடிவமைப்பு பிரிவிற்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்டு மூன்று வருட பணி அனுபவத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள் (மாத ஊதியம் ரூ.63,875/- முதல் ரூ.82,125/- வரை), ஐடிஐ சான்றிதழ் பெற்ற எலக்ட்ரிசியன்கள் (மாத ஊதியம் ரூ.36,500/- முதல் ரூ.40,150/- வரை) மற்றும் எச்விஏசி டெக்னிசியன்களும் (மாத ஊதியம் ரூ.27,375/- முதல் ரூ.32,850/- வரை) அலங்காரப் பொருட்கள் மற்றும் விற்பனையகத்திற்கு பொருத்துதல் தொடர்பான பணிகளை அறிந்த ஸ்டீல் பேப்ரிகேட்டர்கள் (மாத ஊ யம் ரூ.23,725/- முதல் ரூ.27,375/- வரை) தேவைப்படுகிறார்கள்.

மேலும், ஐடிஐ சான்றிதழ் பெற்று மூன்று வருட பணி அனுபவமுள்ள ஜிப்சம்/மர தச்சர்கள், மர பெயிண்டர்கள், சுவர்/கான்கீரிட் பெயிண்டர்கள், டைல்ஸ் கொத்தனார்களும் (மாத ஊதியம் ரூ.23,725/- முதல் ரூ.27,375/- வரை) தேவைப்படுகிறார்கள். மேற்கண்ட பணியிடங்களுக்கு விற்பனையகத்திற்கு பொருத்துதல் அல்லது தனியார் சந்தை விற்பனையகத்திற்கான பொருத்துதல் மற்றும் உணவகத்திற்கான பொருத்துதல் போன்றவற்றில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் பணி அனுபவத்திற்கேற்ப மேற்குறிப்பிட்டுள்ளவாறு ஊதியம் நிர்ணயிக்கப்படுவதுடன், இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தினை omcresum@gmail.com என்ற ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம். இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். RC No. B-0821/CHENNAI/CORPN/1000+/5/308/84 ஆகும்.”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்