டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இதனையடுத்து தனது அணிக்கு குக்கர் சின்னத்தைப் பெறுவதில் டிடிவி தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டர். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கில், இரட்டை இலை சின்னம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை, அடுத்த வரவுள்ள தேர்தல்களில் குக்கர் சின்னத்தைத் தனது அணிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை (இன்று) டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்