டிஜிட்டல் தகவல் பறிமாற்றங்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது- கிஷன் ரெட்டி

0
128

பொதுமக்களின் நன்மைக்காக சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பறிமாற்றங்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

Union minister G Kishan Reddy


இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதிலில், பொதுமக்களின் நன்மைக்காக சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறியீடு வடிவில் உள்ள சமூக வலைதள தகவல்களை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு டிகிரிப்ட் செய்து எழுத்துகளாக மாற்றி அறிந்து கொள்ளும் அதிகாரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கணினி போன்ற மின்னணு சாதனங்களில் உருவாக்கப்படும், சேமிக்கப்படும், அனுப்பி வைக்கப்படும் மற்றும் பரப்பப்படும் தகவல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இடைமறிக்க சட்டம் அனுமதிப்பதாகவும் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்க மற்றும் கண்காணிக்க மத்திய அரசின் குறிப்பிட்ட சில விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அந்த அமைப்புகளும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்ந்து வாட்ஸ்ஆப் பயனாளர்களை உளவு பார்க்க மத்திய அரசு (Pegasus software) பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியதா என்கிற கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here