டிஜிட்டல் ஊடகளுக்கும் இனி வசதிகள், சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு

0
102

பாரம்பரிய ஊடகங்களைபோலவே டிஜிட்டல் ஊடகம்  வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும்செய்திகளை ஒளிபரப்புதல், பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் வசதிகள் மற்றும் நலன்கள் வழங்கப்படும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் அரசின் செய்திக் குறிப்பு 4/2019 -ன்படி மத்திய அரசின் முடிவுக்கு இணங்க டிஜிட்டல் ஊடகம் வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்புதல்/ பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களில் 26% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப்போது மரபு ரீதியான ஊடகங்களுக்கு (அச்சு/தொலைகாட்சி) வழங்கப்பட்டு வரும் இதுபோன்ற கீழ் கண்ட வசதிகளை விரைவில் விரிவாக்கம் செய்வது என மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கருதுகிறது.

அ) அந்த அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது போன்ற உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.

ஆ) பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் நபர்களுக்கான சிஜிஎச்எஸ் பலன்கள் மற்றும் விரிவாக்கப்படும் நடைமுறைகளுடன் கூடிய ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும்.

இ) தகவல் தொடர்பு பணியகம் மற்றும் கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி

2.அச்சு,மின்னணுஊடகத்தில் இருக்கும்சுய ஒழுங்கு படுத்தும் அமைப்புகளைப் போல,டிஜிட்டல்ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன்தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க முடியும்.

நன்றி : இந்து தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here