டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரானதா விஷாலின் இரும்புத்திரை? – கிளம்புது புதுப்பூதம்

0
199
Samantha & Vishal

டிஜிட்டல்மயம் என்பது ராஜீவ்காந்தி காலத்தில் தொடங்கி, மன்மோகன்சிங் காலத்தில் முழுவீச்சில் நடந்தது. அதற்கு டிஜிட்டல் இந்தியா என பெயர் சூட்டி, டிஜிட்டல்மயம் என்பதே தான் பெற்றெடுத்த குழந்தை போல் மோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஒரு பாவனையை நிலைநிறுத்தியது. அதனை அரையடி வசனத்தில் சீண்டியதற்கே மெர்சல் என்ற மோசமான படத்தை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தினர் பாஜகவினர். நமக்குக் கிடைத்திருக்கும் தகவல், விஷாலின் இரும்புத்திரை படம் டிஜிட்டல் மயத்தை மோசமான ஒன்றாக சித்தரிக்கிறது என்பதாகும்.

பணபரிவர்த்தனை டிஜிட்டலுக்கு மாறினால் பொருளாதாரம் மேம்படும் என்பது உள்பட பல்வேறு மாயைகளை இந்த அரசு ஏற்படுத்தியது. இரும்புத்திரையில் இந்த மாயைகளின் பக்க விளைவுகளை காட்டியிருக்கிறாராம் அறிமுக இயக்குனர் மித்ரன். அதாவது பணபரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் நடக்கும் மோசடிகளின் பின்புலத்தில் இரும்புத்திரை எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

தணிக்கையில் இரும்புத்திரை படத்தின் காட்சிகள் குறித்து விவாதம் நடந்ததாகவும், பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டதாகவும், இயக்குனர் அதற்கு ஆதாரத்துடன் பதிலளித்த பிறகே படத்துக்கு சான்றிதழ் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழே வழங்கியிருக்கிறார்கள்.

இதை படித்ததும் டிஜிட்டல் குற்றங்கள் பற்றி படத்தில் வகுப்பு எடுத்திருப்பார்கள் என்று பயப்பட வேண்டாம். மெர்சல் மாதிரி கமர்ஷியலுக்கு கொஞ்சம் டிஜிட்டலையும் ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருப்பார்கள், அவ்வளவே.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாது ஏன்?’

இதையும் படியுங்கள்: விவசாயி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்