குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாத இறுதிக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை கிடையாது என வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்கால சேவை மாற்றங்களுக்கு ஏற்ற தொழில் நுட்ப வசதிகள் இல்லாத குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் டிசம்பர் மாதம் 31ஆம் தேதியிலிருந்து வாட்ஸ் அப் சேவை துண்டிக்கப்பட போவதாக அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கடினமான முடிவாயினும் மக்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களை வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேறு புது தொழில்நுட்ப வசதி கொண்ட போனிற்கு மாறிவிடும்படி அறிவுறுத்தியுள்ளது. அப்போது தான் வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பெற முடியும் என்றும் கூறியுள்ளது.

வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படும் போன் வகைகள்:
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள், பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 பயன்படுத்தப்படும் போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்