டிசம்பர் 26-ல் ரிலீஸாகும் ஓப்போ ரெனோ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

0
169

ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 3(Reno 3) சீரிஸ் போன்கள் டிசம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றன. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஓப்போ ரெனோ 3 (Oppo Reno 3) மற்றும் ஓப்போ ரெனோ 3 புரோ(Oppo Reno 3 Pro) போன்களை இந்த மாத இறுதியில் சீனாவின் ஹாங்க்சோவில் (Hangzhou) நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகின்றனர்.

ஓப்போ ரெனோ3 மற்றும் ரெனோ 3 புரோ ஆகியவை டுயல் மோட் 5G வழங்குவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெனோ 3 சீரிஸ் போன்களுக்கு கூடுதலாக, ஓப்போ தனது டிசம்பர் 26 நிகழ்ச்சியில் Oppo Enco Free truewireless earbuds-ஐயும் அறிமுகப்படுத்துகிறது.

ரெனோ 3 புரோ புதிதாக அறிவிக்கப்பட்ட ஆக்டா குவால்காம்765G எஸ்ஓசி பிராசஸர் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஓஎஸ் 7 இயங்கு தளம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஓப்போ ரெனோ3 புரோ -வில் வளைந்த டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்ட்ராகன் 765G எஸ்ஓசி உடன் 12 ஜி.பி. ரேம் இருக்கும் என்று கூறப்படுகிறது. போனின் குவாட் ரியர் 48 எம்.பி. பிரைமரி சென்சாருடன், 13 எம்.பி. shooter, 8 எம்.பி.  snapper மற்றும் 2 எம்.பி.  கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன், நிறுவனம் தனது டிசம்பர் 26 நிகழ்வில் ஓப்போ என்கோ ஃபிரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் -ஐயும் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. கறுப்பு, பிங் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வரும் ஓப்போ என்கோ ஃபிரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் -ன் அதிகாரப்பூர்வ படங்களையும் ஓப்போ பகிர்ந்துள்ளது. அவற்றின் வடிவமைப்பு Huawei FreeBuds 2 போன்ற தோற்றத்துடன் இருக்கிறது. வேறு விபரங்கள் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here