டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி தடுப்பூசிகள்: சீரம் நிறுவனம் திட்டம்

Once it reaches the market, Serum Institute will produce more doses to meet India’s requirement.

0
77

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 20 முதல் 30 கோடி வரையிலான கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்துநிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதில்சீரம் இன்ஸ்டிடியூட், ஒரேநேரத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பையும், உலக சுகாதார நிறுவனத்தையும் நாடமுயற்சி செய்கிறது. இதனால் நேரம் மிச்சமாகும். இதெல்லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சரியாக நடந்து விட்டால் தடுப்பூசி திரளான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும்.

மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கிவிடும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க சீரம் மருந்து நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவன செயல் இயக்குனர் சுரேஷ் ஜாதவ், கொரோனா வைரசுக்கு எதிரான 5 விதமான தடுப்பூசிகளை தங்களது நிறுவனம் பரிசோதித்து வருவதாக குறிப்பிட்டார்.

முடிவுகளின் அடிப்படையில் சரியான மருந்தின் உற்பத்தி தொடங்கப்பட்டு, தலைமை மருந்து கட்டுப்பாட்டளரின் அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here