டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு: முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேர் கைது

0
64

டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ  தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம்கொடுத்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 2  வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன் உட்பட 32 பேரை கடந்த  பிப்ரவரி 6 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார்  கடந்த பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், 6 மாதங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக உள்துறை அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம்நடத்தி விசாரணையை  தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடைய 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 10 ஆம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து இருதினங்களுக்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முறைகேடுகள் தொடர்பாக மேலும் 40 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இதுவரை டிஎன்பிஎஸ்சி தோ்வுமுறைகேடு தொடர்பாக 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here