டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு: ஜன.24க்கு மாற்றம்

0
1203

குரூப்2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 2ஏ தேர்வு வரும் டிச.27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதலாக 84 பதவிகளுக்கும் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளதால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குரூப் 2ஏ தேர்வு 24.01.2016 அன்று நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்