ஊரகப் பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் 1700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாக மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி, மூடப்பட்ட கடைகள் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.

high

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஊரகப் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

supreme

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்