டால்கம் பவுடர் புற்றுநோயை உருவாக்ககூடியது: உண்மையை மறைத்த ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம்

1
1751

கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணிற்கு 72 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்குமாறு, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்திற்கு, மிசெளரி (Missouri) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிசெளரி நீதிபதி 1999-ல் அமெரிக்கன் புற்றுநோய் மையம் (American cancer society) சுட்டிகாட்டிய ஆபத்துக்கான சாத்தியகூறுகளை ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் அதன் தயாரிப்புகளில் குறிப்பிட தவறிவிட்டது என்று கூறினார்.
அமெரிக்காவில் இருக்கும் டால்கம் பவுடர் தாயாரிக்கும் பல நிறுவனங்கள் டால்க் (talc – மெக்னீசியம் சிலிகேட்டிலிருந்து உருவாக்கபடுவது) பயன்படுத்துவதை 1990- ளிலேயே நிறுத்திகொண்டன. பிரிட்டனில் பல நிறுவனங்கள் டால்கை (talc) பயன்பாட்டிலேயே வைத்திருக்கின்றன.
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் தங்களுடைய வியாபாரத்தை அதிகபடுத்துவதற்காக நுகர்வோரிடம் உண்மையை மறைத்துவிட்டது, அதாவது, டால்க் கலந்த பொருட்கள் புற்றுநோயை உருவாக்க கூடியது என்பதை மறைத்துவிட்டது என்றும் கூறினார்.
அலபாமாவில் உள்ள பெர்மிங்காமில் வாழ்ந்து வந்த ஜேக்குலின் பாக்ஸ், அந்தரங்க சுகாதாரத்திற்காக ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் டால்கம் பவுடரையும், ஷவர் டு ஷவர் (shower to shower) பவுடரையும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்திருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் டால்கம் பவுடரை பயன்படுத்தியதாலேயே தனக்கு கருப்பை புற்று நோய் வந்ததாக மிசெளரி கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு முன்னதாகவே பாக்ஸ் இறந்ததால் அவருடைய மகன், தொடர்ந்து அவ்வழக்கை நடத்தி வந்திருக்கிறார்.
இந்த வழக்கின் தீர்ப்பாக மிசெளரி (Missouri) நீதிமன்றம் ஜேக்குலின் பாக்ஸுக்கு 72 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.

பாக்ஸின் வழக்கறிஞர் இந்த வழக்கின் தீர்ப்பை பற்றி கூறும் போது ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் மோசடி, அலட்சியம் மற்றும் சதி போன்றவைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
பாக்ஸின் வழக்கறிஞர் ஜேரே பீஸ்லி (Beasley) பத்திரிகையாளர்களிடம் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்துக்கு டால்க் (talc) பயன்படுத்தினால் புற்றுநோய் வரக்கூடு என்பது 1980 க்கும் முன்பே தெரியும். இருந்தும் நுகர்வோரிடமும், உரிமை பெற்ற அமைப்புகளிடமும் உண்மையை மறைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவன செய்தி தொடர்பாளர் carol Goodrich ”மக்கள் நலத்திற்கும், உடல் பாதுகாப்பிற்கும் எந்த விதத்திலும் நாங்கள் கேடு விளைவிக்கும் பொருட்களை தயாரிக்கமாட்டோம். இந்த வழக்கின் தீர்ப்பு எங்களை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நாங்கள் பாக்ஸின் இறப்புக்காக வருந்துகிறோம் அதேநேரம் நாங்கள் டால்க் (talc) பயன்பாடு அறிவியல் முறையில் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக நம்புகிறோம் என்று கூறினார்.
Valeant pharmaceuticals international inc ஷவர் டு ஷவர் (shower to shower) – ஐ தயாரிக்கிறது ஆனால் அந்நிறுவனம் இந்த வழக்கின் பிரதிவாதி இல்லை.
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் ஆபத்துக்கான சாத்தியகூறுகளை மக்களுக்கு தெரிவிக்க தவறிவிட்டதாக 1000 வழக்குகள் மிசெளரி கோர்ட்டிலும், 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் பதிவு செய்யபட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாதுகாப்பான அழகு சாதன பொருட்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. அப்போது ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவன பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது அதனால் அந்நிறுவன பொருடகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுகொண்டனர். அதன் பிறகு 2012 –ல் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் தங்களுடைய பொருட்களில் dioxine மற்றும் formaldehyde – யும் பயன்படுத்துவதில்லை என்ற் தெரிவித்தது. (dioxine மற்றும் formaldehyde புற்றுநோய் உருவாக்ககூடியவை என்பது நிரூபிக்கபட்டுள்ளது)
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் டால்க் (talc) பற்றி பேசும் போது 1970 க்கு முன்னால் டால்கம் பவுடரில் asbestos fiber கள் கலந்து இருந்தது, அது புற்றுநோயை உருவாக்க கூடியது என்றும் அதன் பிறகு தயாரிக்க பட்ட டால்கம் பவுடரில் asbestos fiber இல்லாமல் தயாரிக்க பட்டது என்றும் கூறுகிறார்கள்.
மேலும் டால்க் (talc) துகள்கள் கருப்பை வரைக்கும் செல்லும் என்றும், அது எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். தொடர்ந்து பலநாட்கள் இந்த மாடிரி பாதிப்பு ஏற்படுமாயின் அது புற்றுநோயை உருவாக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இந்தியாவில் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம்
2011 –ல் கேரளாவில் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டி போராட்டம் நடந்ததும், அதன் பிறகு 2013 –ல் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மும்பை முலுந்தில் உள்ள ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்