டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து 76.49-இல் நிலைத்தது. இதுகுறித்து அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கூறியதாவது:
உள்நாட்டுப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினர். அத்துடன், வெளிநாட்டு சந்தைகளில் அந்த நாட்டு கரன்சிகளின் மதிப்பும் ஸ்திரமாக இருந்தது.
இதன் காரணமாக, ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து, 76.49-ஆக நிலைத்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய்: சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.39 சதவீதம் சரிந்து, பேரல் ஒன்று 106.82 டாலருக்கு வர்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.