வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று(திங்கள்கிழமை) மேலும் வீழ்ச்சியடைந்து 72.32 ஆக உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இறக்குமதியாளர்களிடம் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகம் இருப்பதே முக்கிய காரணம் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்க – சீன வர்த்தக பிரச்சனைகள் காரணமாக டாலருக்கு எதிரான இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பு நெருக்கடியை சந்திக்கின்றன.

* போரெக்ஸ் மார்க்கெட்டில் குறைந்த அளவு டாலரையே ரிசர்வ் வங்கி வழங்குவதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

* சீனாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பிவரும் பிரச்னைகளால் ஆசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து 8-வது நாளாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

*புதிய ஆயில் உற்பத்திக்கான பணியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால். கமாடிட்டி சந்தையில் ஆயில் விலை அதிகரித்துள்ளது.

*ஈரானின் ஆயில் ஏற்றுமதிக்கு எதிராக அமெரிக்க விதித்திருக்கும் பொருளாதார தடைகளும் கச்சா எண்ணெய் சந்தை நெருக்கடிகளுக்கு ஓர் காரணம்.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here