டாடா ஸ்கை நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்கான அன்லிமிட்டெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா ஸ்கை நிறுவனத்தின் பிராட்பேண்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி.டி.ஹெச். சேவைகளை வழங்கி வரும் டாடா ஸ்கை தற்சமயம் பிராட்பேண்ட் சந்தையில் களமிறங்குகிறது. 

தற்சமயம் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவைகள் இந்தியா முழுக்க 21 நகரங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் சலுகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், டாடா ஸ்கை பிராட்பேண்ட் அன்லிமிட்டெட் சலுகைகளை அறிவிக்க துவங்கி இருக்கிறது.

ஆமதாபாத்தில் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சலுகை ரூ. 590 எனும் மாத கட்டணத்தில் கிடைக்கிறது. இதில் ஒரு மாதத்திற்கான அன்லிமிட்டெட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர டாடா ஸ்கை சேவையில் மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ. 590 துவக்க விலை சலுகையில் பயனர்களுக்கு 16Mbps வேகத்தில் இணைய சேவை, இலவச ரவுட்டர், டேட்டா ரோல்ஓவர் மற்றும் சேஃப் கஸ்டடி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ. 700 விலை சலுகையில் 25Mbps வேகத்தில் இணைய சேவையும், ரூ. 800 சலுகையில் 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

இத்துடன் ரூ. 1,100 மற்றும் ரூ. 1,300 மாதாந்திர சலுகைகளில் 75Mbps மற்றும் 100Mbps வேகத்தில் இணைய சேவையை வழங்குகிறது. புதிய சலுகைகள் அனைத்திலும் இலவச ரவுட்டர் வழங்கப்படுகிறது. எனினும், பயனர்கள் இச்சலுகையை பயன்படுத்த இன்ஸ்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாதாந்திர சலுகையை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கான சலுகை கட்டணம் ரூ. 1770 முதல் துவங்குகிறது. இச்சலுகையில் 16Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் 25Mbps மற்றும் 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் சலுகைகளின் கட்டணம் முறையே ரூ. 2,100 மற்றும் ரூ. 2,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

75Mbps மற்றும் 100Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் சலுகைகளின் கட்டணம் ரூ. 3,300 மற்றும் ரூ. 3,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாதத்திற்கான சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்ஸ்டாலேஷன், சேஃப் கஸ்டடி மற்றும் ரவுட்டர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதேபோன்று ரூ. 5310 விலையில் துவங்கி ஒன்பது மாதங்களுக்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஒன்பது மாதங்களுக்கான சலுகையை தேர்வு செய்யும் போது 13 மாதங்களுக்கான பலன்களை பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here