டாடா மோட்டார்சின் டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்து ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் நோக்கில் கூடுதல் வசதிகளுடன் limited-edition model டாடா டிகோர் பஸ்(Tata Tigor Buzz) அறிமுகம் செய்துள்ளது.

DflMseNU0AANpR3

விற்பனையில் உள்ள மிட் வேரியன்ட் மாடலான XT வேரியன்டை பின்பற்றி மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் டிகோர் பஸ் special-edition model பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல், டாடா மோட்டார்ஸ் டீலர்கள் வாயிலாக கிடைக்க தொடங்கியுள்ளது.

DflMvWWU8AATYPF

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

DflMvW6V4AEcY9F

டிகோர் Buzz special-edition model மாடலில் மேற் கூரை பளபளப்பு மிகுந்த கருப்பு நிறத்தை பெற்றதாக,இரட்டை வண்ண அலாய் வீல், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், முன்புற க்ரில் அமைப்பில் சிவப்பு வண்ண அலங்காரம் மற்றும் பின்புறத்தில் பூட் லிட்டில் Buzz எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்காரம் இடம்பெற்றிருக்கிறது. புதிய உயர் தர ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

DflMvXHUEAAWvJ8

பெட்ரோல் மாடல் ரூ 5.68/- விலையிலும் ரூ 6.57/- லட்சத்தில் டீசல் மாடலும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here