டாடா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஹேரியர் (H5X SUV as ‘Harrier’) காரை அறிமுகம் செய்யவுள்ளது.

டாடா ஹேரியரை இன்று(அக்டோபர் 15) முதல் முன்பணமாக ரூ. 30 ஆயிரத்தை செலுத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறவனம், டாடா ஹேரியரை அக்டோபர் 15-ம் தேதி முன் பணமாக ரூ. 30 ஆயிரத்தை அளித்து புக்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் ஹேரியர் காரின் விலை இன்னும் நிர்ணையம் செய்யப்படவில்லை. 2019 ஜனவரியில் ஹேரியர் அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு ஒரு மாதத்திற்குள்ளாக காரை டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறது.

2019-ல் எதிர்பார்க்கப்படும் முக்கிய கார்களில் டாடா ஹேரியர் முதன்மை வகிக்கிறது. இந்த காரை பிரபலப்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறவனம் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள BSVI மாசு கட்டுப்பாடுகளை ஹேரியர் கார் பூர்த்தி செய்கிறது. ராக்கெட்டுகளில் கிரையோஜெனிக் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனை மாடலாக கொண்டு ஹேரியரின் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்