இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக விற்பனையாகி வரும் டாடா நானோ விற்பனை மிக விரைவில் நிறுத்தப்படுகிறது. உலகின் விலை குறைந்த கார் மாடலாக டாடா நானோ அறிமுகமானது.

2009 ஆம் ஆண்டு ஹேட்ச்பேக் மாடலாக நானோ காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. டாடா நானோ இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் ரூ.1 லட்சம் விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக வெளிவந்தது.

இந்நிலையில் நானோ காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்துகிறது. கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவின் முயற்சியால் நானோ கார் உருவானது. இந்தியாவில் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த மக்களும் வாங்கக்கூடிய பட்ஜெட் விலையிலான கார் ஒன்றை வெளியிட அவர் விரும்பினார். இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக புதிய நானோ காரை வாங்குவார்கள் என ரத்தன் டாடா நம்பினார்.

இந்நிலையில் சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்து, காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துவக்கத்தில் நானோ கார் மாதம் வெறும் 100 யூனிட்களே விற்பனையானது.

அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக டாடா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here