டாக்டர் விஜய்… வெளிவந்த மெர்சல் ரகசியம்

0
651

மெர்சலில் ஒரு விஜய் கிராமத்து இளைஞனாக வருகிறார். இன்னொருவர் மேஜிக் நிபுணர். மூன்றhவது ஒரு விஜய் இருக்கிறாரா? இருந்தால் அவருடைய கேரக்டர் என்ன?

இந்த கேள்விகளுக்கு இரண்டு நாள் முன்பு அட்லி அளித்த பதில், “விஜய்க்கு படத்தில் இரண்டு வேடங்களா இல்லை மூன்றா என்பதை படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.” அவ்வளவு நாள் நம்மால் வெயிட் பண்ண முடியாது. படத்தின் நாயகி காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் மூன்றாவது விஜய் யார் என்பதற்கு க்ளூ கிடைத்திருக்கிறது.

துப்பாக்கி, ஜில்லா படங்களைப் போல் விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகள் இருப்பதாக கூறியிருக்கும் காஜல் அகர்வால், படத்தில் அவர் டாக்டராக வருகிறார். நானும் அவருடன் மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறேன் என கூறியுள்ளார். ஆக, கிராமத்து விஜய், மேஜிக் நிபுணர் இரண்டும் இல்லாமல் மூன்றாவது ஒரு கதாபாத்திரமும் விஜய்க்கு இருக்கிறது, அதுவொரு மருத்துவர்.

அட்லிக்கு இல்லாத விசால மனம் காஜலுக்கு இருக்கிறது. ரகசியத்தை இப்படி திறந்து காட்டியிருக்கிறாரே.

இதையும் படியுங்கள்: குஜராத்தில் பாஜக கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ

இதையும் படியுங்கள்:ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்