டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்: முதல்கட்ட கள நிலவரம்

நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதும் காற்று மாசுபாடும் ஆர்.கே.நகர் மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கின்றன.

0
755

இடைத்தேர்தல் வந்துச்சுன்னா அந்தப் பகுதி மக்களுக்கு ஒரே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்; திருவிழா மாதிரி தெருவெல்லாம் களைகட்டிவிடும். துப்புரவுத் தொழிலாளர்கள் டெய்லியும் வந்து குப்பைய அள்ளிட்டுப் போவாங்க. ஆரம்ப சுகாதார மையங்கள் எல்லாம் திறந்திருக்கும்; அங்க நர்ஸ் இருப்பாங்க; பஸ் சர்வீஸ் முடங்காது. பல நாளுக்கு முன்னாடி பார்த்த கரைவேட்டிக்காரங்க நம்மைக் கையெடுத்து கும்பிடுவார்கள். நிலாவுல இருந்து வெளிச்சத்தை எடுத்து நேரா உங்க வீட்டுக்கே கொண்டுவாரோமுன்னு வாக்குறுதி தருவாங்க; ஏப்ரல் 12இல் இடைத்தேர்தல் நடக்கப்போற ஆர்.கே நகரிலும் இதையெல்லாம் நாம் பாக்க முடியிது. சென்னையில பல இடங்களில தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் தவிச்சிக்கிட்டு இருக்காங்க; ஆனா ஆர் கே நகருல சில தெருக்களில தண்ணி லாரி சுத்திக்கிட்டு வர்றத நேருல பாக்க முடிஞ்சிது. ஆர். கே. நகர் இடைத்தேர்தல் தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றத்தை உருவாக்கப் போறதில்லை; இருந்தாலும் பிளவுபட்டுக் கிடக்குற அ.இ.அ.தி.மு.க அணியில மக்கள் செல்வாக்கு பெற்றவர் யார், பன்னீர் செல்வமா? சசிகலாவா? அப்படிங்குறத நிரூபிக்கிற தேர்தலாக இரண்டு தரப்பும் பாக்குறாங்க.

இதையும் பாருங்கள்: “எண்ணெயவிட தண்ணிய சிக்கனமா செலவழிக்கிறோம்”

இதையும் படியுங்கள்: இந்த முறை சஸ்பென்ஸ் வைக்கவில்லை ரஜினி

ஜெயலலிதாவுக்கு மிகுந்த மக்கள் செல்வாக்கு இருந்த தொகுதி ஆர்.கே. நகர். கடந்த 23ந் தேதி தினகரன், மதுசூதனன், தீபா மூணு பேரும் ஒரே நாள்ல வேட்புமனு தாக்கல் செஞ்சாங்க. ஒரே கட்சி பிளவுபட்டு மூணா நிக்கிறபோதும் மூணு பேருக்குமே ஆதரவாளர்கள் கூட்டம் குறைவில்லாம இருந்துச்சு. தீபாவும், மதுசூதனனும், தினகரனும் வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும்போது மூவருக்குமே சமமான அளவுல வாழ்க கோஷம் இருந்துச்சு. அதனால யார் அதிக மக்கள் ஆதரவைப் பெற்றவங்கன்னு இப்பவே நாம சொல்லிர முடியாது. பல இடங்களில பன்னீர்செல்வத்தை ஆதரிச்சி பேசினாலும் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு முந்தின நாள் வரையில் வாக்காளர்களின் மனநிலைமையைக் கணிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணம் சசிகலாதான் என்ற எண்ணம் ஏராளம் மக்கள் மனதில் ஆரம்பத்தில் இருந்தது. சமூக வலைத்தளங்களில் சசிகலாவை வசைமாரி பொழிந்தார்கள். ஆனா இப்ப அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிகிட்டு வருதுன்னுதான் சொல்லணும். ஏன்னா தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தபோது உள்ளூர் மக்கள் அதிக அளவுல திரண்டிருந்தார்கள்; பெண்கள் கூட்டத்திலிருந்து ’’சின்னம்மா வாழ்க” கோஷம் அதிகமாகவே இருந்த்துச்சு. அரசியல்ல என்ன நடந்தாலும் மூணே மாசத்துல மக்கள் மறந்துடுவாங்கன்னு யாரோ சொன்னது உண்மைதான்.

இதையும் பாருங்கள்: பச்சப் புடவை கட்டி கொண்ட வச்சு அம்மாவாகிட முடியுமா?

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

கொருக்குப்பேட்டை கண்ணன் தெரு, எம்.எஸ். நாயுடு தெரு, மின்ட் சுப்பராயலு தெரு, விஜயராகவா தெரு, ராயபுரம் புதுமனைக்குப்பம் ஆகிய பகுதி மக்கள் தென் சென்னையைப்போல் வடசென்னை வளர்ச்சியடையாததை ஒரு குறையாக சொன்னார்கள். கோடைக்காலத்துல மட்டுமல்லாமல் எல்லா காலத்துலேயும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தை யாருமே கண்டுக்க மாட்டாங்கங்கறது அவர்கள் மத்தியில் பெரும் குறையாக இருக்கிறது. புதுமனைக்குப்பம் மீனவ மக்கள் ஜெயலலிதா மீது அதீதப் பற்றுள்ளவர்களாக இருப்பது தெரிகிறது. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை மதுசூதனனுக்கு அதிக அளவில் ஆதரவு இருக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை மன்னப்ப தெரு பகுதியிலுள்ளவர்களைச் சந்தித்தேன். திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள போக்குவரத்து நெரிசல்தான் அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறதா சொன்னாங்க. திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருது கணேஷ் தொகுதிக்குப் பழக்கமில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கங்கை அமரனை இசையமைப்பாளராகவும் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மட்டுமே எங்களுக்குத் தெரியும் என்றும் தினகரனை மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் ஜெயித்தால் இந்தப் பக்கம் வர மாட்டார் என்றும் தீபாவை அனுபவம் இல்லாதவர் என்றும் இந்தப் பகுதி மக்கள் சொன்னார்கள். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். மதுசூதனன் பிறப்பால் தெலுங்கர் என்பதாலும் ஏற்கனவே இந்தத் தொகுதியில் ஜெயித்தவர் என்பதாலும் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாத இந்தப் பகுதி மக்கள் சொல்றாங்க.

நான் முன்னே சொன்னது மாதிரி ஓட்டுப்பதிவுக்கு முந்தின நாள் வரைக்கும் மக்களோட மனநிலைமை மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன; தினகரனுக்கு ஆதரவாக பல மந்திரிகள் வீதி வீதியாக வந்து வாக்கு சேகரிக்கிறார்கள். சீமான் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு உதயத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அனல் பறக்கும் வெயிலிலும் ஆர். கே. நகரில் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது. நொடிக்கு நொடி மாறும் மனிதர்களின் மனநிலை; தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருப்பதால் மனசுகள் மாறுமா அல்லது மாற்றம் நிகழுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் பாருங்கள்: செல்ஃபோனால் நாம் தொலைத்தவை எவை?

இதையும் படியுங்கள்: நஜீப் அகமது பற்றி பொய்ச்செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குக் கண்டனம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்