File Image

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசானது வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகளும், மேலும் பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிலும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள ஞயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூட வேண்டும் என்ற சுற்றறிக்கையை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 2, 9, 16, 23, 30 உள்ளிட்ட 5 தேதிகளில் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால், கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் அபராதமும் வசூலிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு மக்கள் கூட்டமானது தவிர்க்கப்படுமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here