சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) 3 மணி முதல் சேவையை வழங்க உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைவரும் உடல் நலனை ஆரோக்கியமாக பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து நாளை சென்னை மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பதிலாக அதிகாலை 3 மணி முதல் ரயில் சேவையை வழங்க உள்ளது.

மேலும்,போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடங்களை இலவசமாக வழங்குகிறது. அனைத்து ஓட்டப் பந்தயங்களும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

10 கிலோ மீட்டர் தூர ஓட்டப் பந்தயம், தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகில் முடிவடையும். மற்ற ஓட்டப்பந்தய பிரிவுகள் கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடையும்.

இந்த மாரத்தான் போட்டிகள் 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 32 கிலோ மீட்டர் மற்றும் 42 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here