ஜோதிகா நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
450
Jyothika

நாச்சியார் படத்தில் நடித்த ஜோதிகாவின் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திருமணமான பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அவர் நடித்த நாச்சியார் வெளியானது. ஜோதிகாவின் அடுத்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான தும்கரி சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். தனஞ்செயன் படத்தை தயாரிக்கிறார். ஜோதிகாவை வைத்து மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.

மகேஷ் முத்துசாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் எடிட்டிங்கை கவனிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

இதையும் படியுங்கள்: 15,500 கோடி ரூபாய் கடன்’: திவாலாகிறது ஏர்செல்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்