ஜோக்கராக நடிப்பதில் மகிழ்ச்சி என்று இந்தியின் பிரபல நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார்.

இந்திப் படவுலகை கலக்கும் திறமையான நடிகர்களில் அரிதானவர் நவாசுதின் சித்திக். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் பேட்ட படத்தின் மூலம் நவாசுதின் தமிழுக்கு வருகிறார். அதற்குமுன் ஜோக்கர் படத்தின் இயக்குநர் ராஜு முருகன் நவாசுதினை மும்பை சென்று சந்தித்துள்ளார்.

ஜோக்கர் படத்தை பாராட்டிய நவாசுதின், இந்தியில் ஜோக்கரை எடுத்தால் ஜோக்கராக அதில் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பேட்ட உள்பட சில படங்களில் தற்போது நடித்து வருவதால் அடுத்த வருடமே கால்ஷீட் தர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தில் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யபின் நடிப்பு அனைவரையும் மிரட்டியது. தொடர்ந்து அவரை தமிழ்ப் படங்களில் நடிக்க கேட்கிறார்கள். அதேபோல் நவாசுதின் சித்திக்கையும் தமிழில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்