ஜேஎன்யுவில் நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிச துல்லியத் தாக்குதல் – மம்தா பானர்ஜி

0
306

ஜேஎன்யுவில் நடந்தது திட்டமிட்ட பாசிச துல்லியத் தாக்குதல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியின்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்தக் கும்பல் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.   இந்தத் தாக்குதலில்   சுமார் 50 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், ஜேஎன்யு ஆசிரியர் மீதும் ,  சபர்மதி விடுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தேர்வுப் பதிவை ஒத்திவைக்க கோரியும், கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. ஜேஎன்யு மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி பெரியார் விடுதி பகுதிக்குச் சென்றது. அப்போது, மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.  இச்சம்பவத்தில் காயமடைந்த சுமார் 50 மாணவர்கள் எய்ம்ஸ் விபத்து காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், சதீஷ் சந்திரா ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தனர். 

இந்நிலையில் ஜேஎன்யுவில் நடந்தது திட்டமிட்ட பாசிச துல்லியத் தாக்குதல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக திங்களன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

ஜேஎன்யுவில் நடந்தது திட்டமிட்ட பாசிச துல்லியத் தாக்குதல். போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் ஆளுகையின் கீழ் செயல்படுகின்றனர். ஒரு பக்கம் பாஜக குண்டர்களை அனுப்புகின்றது. மறுபக்கம் போலீசை செயல்படவிடாமல் தடுக்கின்றனர்.

உயர் அதிகாரிகள் உத்தரவால் போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானியர்கள் அல்லது நாட்டின் எதிரி என்று முத்திரை குத்துகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here