ஜேஎன்யுவில் சிசிடிவி கேமராக்களை மாணவர்கள் உடைக்கவில்லை; பொய் சொன்ன துணைவேந்தர் ; RTI –யில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

0
373

ஜே என் யு வில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராக்களின் பதிவு இருக்கிறதா என ஜே.என்.யு நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட போது, சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே போராட்டம் செய்த  மாணவர்களால் நொறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது நிர்வாகம். கேமராக்களின் பதிவை சேமிக்கும் சர்வர்கள் CIS மையத்தில் இருந்ததாகவும், அந்த மையத்தை அதற்கு முந்தைய நாளே  மாணவர்கள் தாக்கி நாசம் செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது  நிர்வாகம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு  ஜேஎன்யு.-வின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் மமிதாலா கொடுத்த பேட்டியில் ஜனவரி 5-ஆம் தேதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் சிசிடிவி பதிவுத் தகவல்களை எடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஏனெனில் போராடும் மாணவர்கள் சிசிடிவி தகவல் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். கடந்த ஜனவரி 3, 4-ஆம் தேதியே அவர்கள் அந்த மையத்தை உடைக்க முயற்சித்தது ஏன்? அவர்கள் சர்வர்களை முடக்க முயற்சித்தது ஏன் ? அதற்குப் பிறகு 5-ஆம் தேதி இந்த வன்முறைச் சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறும் என அவர்களுக்கு முன் கூட்டியே தெரியுமோ என சந்தேகம் ஏற்படுகிறது  என்று கூறியிருந்தார்

அதாவது, விடுதிக் கட்டணக் குறைப்புக்காக போராடும் மாணவர்கள் 5-ஆம் தேதி இப்படி ஒரு வன்முறையை (தங்களைத் தாங்களே அடித்துக் கொள்ளும்!?! வன்முறையை) நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டு, அதற்காகவே 3, 4-ஆம் தேதிகளில் CIS தகவல் மையத்தில் இருக்கும் சர்வரை அடித்து உடைத்திருக்கின்றனர், என்பதுதான் துணைவேந்தர் தெரிவித்த குற்றச்சாட்டு.

இந்நிலையில் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜேஎன்யு-வில் நடந்த சம்பவங்கள் குறித்து விவரங்கள் கேட்டுள்ளார். அந்த பதிலில்  ஜேஎன்யு நிர்வாகம் மற்றும் அதன் துணைவேந்தரின் பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கிடைத்த  பதிலில் மின்சார சப்ளையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, தகவல் மையம் செயல்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் 30, 2019 முதல் ஜனவரி 8, 2020 வரையில்  எந்த ஒரு சிசிடிவி கேமராவோ, உயிரிஅடையாளக் கருவிகளோ (Biometric Systems) அங்கு உடைக்கப்படவில்லை.

ஜவகர்லால் நேரு பல்கலையின் மையமான சர்வர், ஜனவரி 3ஆம் தேதி மின்சார சப்ளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. மறுநாள்வரை இந்நிலைமை அப்படியே நீடித்தது. ஜனவரி 5-ஆம் தேதி மதியம் 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான அனைத்து சிசிடிவி பதிவுகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதில் மூலம், சிசிடிவி கேமராவோ, நபர்களின் வருகையைப் பதிவு செய்யும் உயிரிஅடையாளக் கருவிகளையோ போராட்டக் காரர்கள் உடைக்கவில்லை. சர்வர் மின்சாரப் பிரச்சினை காரணமாக செயலற்றுப் போயிதுக்கிறது , யாரும் அதனைத் தாக்கி உடைக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. 

மேலும், ஜனவரி 4-ஆம் தேதி, மதியம் 1 மணியளவில் தகவல் மைய அலுவலகத்தின் சர்வருக்கு வரும் ஆப்டிக் பைபர் கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.  சிசிடிவி கேமரா பதிவுகள் எதுவும் தகவல் மைய அலுவலகத்தில் உள்ள சர்வரில் பதிவாகாது என்றும் வளாகத்தில் உள்ள தரவு மையத்தில்தான் பதிவாகும் என்றும்  ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம்  சிசிடிவி காட்சிகளை மறைக்க மாணவர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு  சிசிடிவி சர்வர் சேதமாக்கப்பட்டது என்று துணை வேந்தர் கூறியது பொய் என்று அம்பலமாகியுள்ளது.  சிசிடிவி காட்சிகளை வெளிப்படையாக வெளியிடுவதில் நிர்வாகத்திற்குத்தான் பிரச்சினை என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது . 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்   ஜனவரி 5 ஆம் தேதி   மாணவர்கள் மீதும்  ஆசிரியர்கள் மீதும்  ஏ.பி.வி.பி கும்பல் தாக்குதல் நடத்தியது .  

இதில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷ் கோஷ் உள்ளிட்ட பல மாணவர்களும் – ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர்.

 இந்தக் கலவரங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஜேஎன்யு நிர்வாகமும் அதன் துணை வேந்தரும் இரவு 9 மணியளவில் அறிக்கை வெளியிட்டனர்.

அதில் இடதுசாரி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்பிய மாணவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், தேர்வு எழுத விரும்பியவர்களுக்கும், அதனைத் தடுக்க விழைந்த இடதுசாரி தரப்பினருக்கும் இடையேயான பிரச்சினைதான், பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கான காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இந்தியா டுடே நடத்திய ஒரு செய்தி சேகரிப்பில் வீடியோவில் ஏபிவிபி இதில் நேரடியாக ஈடுபட்டது அம்பலமானது.

தொடர்ந்து இந்தியா டுடே தொலைக்காட்சி வெளியிட்ட ‘ஸ்டிங் ஆபரேஷன்’ காணொளியில் ஏ.பி.வி.பி. ஆர்வலர் என்று கூறிய ஒரு மாணவர் ஜனவரி 5 ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டதாக சாட்சியமளித்தார். இதை நிரூபிக்க ஏ.பி.வி.பி.-யின் பேரணி ஒன்றில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை  ஒரு செய்தித்தாளில்  இருந்து அத்தொலைக்காட்சி வெளியிட்டது.

திருப்பி தாக்குவதற்கு போலிஸ் ஊக்கமளித்ததாகவும் அவர் கூறினார். “வளாகத்திற்குள் தான் போலிஸ்காரர்கள் இருந்தனர். விடுதியில் ஒரு மாணவன் காயமடைந்தவுடன் நானே போலிசுடன் பேசினேன். மணிஷ் என்ற மாணவனை சந்தித்த போலிஸ்காரர் அவர்களை அடி, அவர்களை அடி என்று கூறினார்.

தாக்குதல் நடக்கும் போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டதற்கு போலீஸார் உதவினார்கள் என்றும் அந்த மாணவர் இந்தியாடுடே தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார். 

 https://indianexpress.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here