ஜெயலலிதா உருவப்படத் திறப்பு நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்துகொள்ளாததற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், திங்கட்கிழமை (பிப்.12), மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்திருந்தன. மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ”பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது நட்பு முறையில் அதனை ஜெயலலிதா வரவேற்றிருந்தார்” என்றார். ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் பாரதிய ஜனதா கட்சியினர் கலந்துகொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத் திறப்புக்கு ஆணாதிக்கம் கொண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்