முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ளது. அங்கு 24 மணி நேரமும், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை, அருண் ராஜ் என்ற ஆயுதப் படை காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சக காவலர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அருண் ராஜ், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தச் சம்பவம் குறித்து அவரது தந்தை, தற்கொலை செய்யும் மனநிலையில் தனது மகன் இல்லையென்றும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here