மோடி – மெர்க்கெல் சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தகம், சர்வதேச பிரச்னை உள்ளிட்டவை குறித்து முக்கியமாக பேசப்படவுள்ளது. இதேபோன்று ஜெர்மனி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள், குழும தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடியும், ஏஞ்செலா மெர்க்கெலும் பேசவுள்ளனர். 

ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமரும் 5-வது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர். நேற்றிரவு டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவரை பிரதமல் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் வரவேற்றார். 

(நவ-1) இன்று குடியரசு தலைவர் மாளிகையில் மெர்க்கெலுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். இதன்பின்னர் காந்தி சமாதிக்கு செல்லும் மெர்க்கெல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருக்கிறார். 

டெல்லியில் இந்தியா – ஜெர்மனி அரசு விவகாரங்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி பிரதமர் பங்கேற்கவுள்ளார். 

மோடி – மெர்க்கெல் சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தகம், சர்வதேச பிரச்னை உள்ளிட்டவை குறித்து முக்கியமாக பேசப்படவுள்ளது. இதேபோன்று ஜெர்மனி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள், குழும தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடியும், ஏஞ்செலா மெர்க்கெலும் பேசவுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here