ஜெர்மனியில் ஜூன் 29 வரை சமூக இடைவெளி தொடரும்

The German government has said it will keep social distancing restrictions in place until June 29. European countries are easing lockdown measures as they gear up for the summer holidays.

0
111

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி விதிகளை ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஜெர்மன் அரசு.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று ஜெர்மன் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

ஜெர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கத்திட்டமிட்டு வருகிறோம். தற்போது ஜெர்மன் கொரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

8.3கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,81,288 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.8,498 பேர் பலியாகியுள்ளனர். 1,62,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  (இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here