ஜெய்ஶ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவனை தீ வைத்துக் கொளுத்திய கும்பல்

0
409

உத்தரபிரதேசம் , சந்தோலி மாவட்டத்தில் ஜெய்ஶ்ரீராம் என்று சொல்ல மறுத்த 15 வயது முஸ்லிம் சிறுவனை ,   தீயிட்டு கொளுத்தியிருக்கிறது 4 பேர் சேர்ந்தக் கும்பல். ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. உடலில் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிறுவனை வாரணாஅசியில் இருக்கும் சௌரா மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.    

60 சதவீதம் தீக்காயங்கள் உடலில் இருப்பதால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

நான் துதாரி பாலத்தில் நடந்துச் சென்ற போது 4 பேர் என்னை துக்கிச் சென்றார்கள். என்னை ஜெய்ஶ்ரீராம் என்று சொல்ல வறுபுறுத்தினார்கள் நான் சொல்ல மறுத்த போது என் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். அப்போது நான் ஜெய்ஶ்ரீராம் என்று கூறினேன் . பின்பு என் மீது தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்  என்று அந்தச் சிறுவன் மருத்துமனை பதிவு செய்த கேமராவில் கூறியுள்ளான்.   

 வாரணாசி போலீஸ் அதிகாரிக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்று  IANS நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

அந்த சிறுவன் தனக்குத்தானே தீவைத்து கொளுத்தியுள்ளார். அவருடைய வாக்குமூலம் இருவிதமாக இருக்கிறது   . அவர் கூறுவதில் சந்தேகம் இருக்கிறது . மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை  என்று சந்தோலி எஸ்பி சந்தோஷ் குமார் சிங் ஏ என் ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.