ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை மக்களை அடிக்கவே பயன்படுத்துகிறார்கள் – பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்

0
354

மா துர்காவை போலல்லாமல் ,  ஜெய் ஶ்ரீராம் கோஷம் மேற்கு வங்க கலாச்சாரத்தில் இல்லை . ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை , மக்களைக் அடிக்க பயன்படுத்துகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் கூறியுள்ளார். 

வங்காள மக்களின் மனதில் எங்கும் நிறைந்திருகிறார் மா துர்கா என்று  ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் பேசிய நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

ஜெய் ஶ்ரீராம் கோஷம் மேற்கு வங்க கலாச்சாரத்தில் இல்லை என்றும் தற்போது ராம நவமி கொண்டாடப்பட்டு  வருகிறது என்னுடைய காலங்களில் இதைப் பற்றி கேள்விபட்டது இல்லை என்றும் கூறியுள்ளார் அமர்த்யா சென் . 

என்ன்னுடய பேத்தியிடம் யார் உனக்கு பிடித்தமான தெய்வம் என்று நான் கேட்ட போது அவள் மா துர்கா என்றாள். மா துர்கா நம்முடைய வாழ்வில் நிறைந்திருக்கிறார் என்று அமர்த்யா சென் கூறியுள்ளார். 

மக்களை அடிக்க, பயமுறுத்த ஜெய்ஶ்ரீராம் கோஷத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஶ்ரீராம் கூற சொல்லி வன்முறைகள் நடப்பதைத் தொடர்ந்து அமர்த்யா சென் இவ்வாறு கூறியுள்ளார். 

ஏழைகளின் வருமானத்தைக் ஏற்றினால் மட்டும் ஏழை மக்களின் ஏழ்மை ஒழியாது என்று கூறினார். அடிப்படை சுகாதாரம், அடிப்படை கல்வி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை கொடுத்தால் மட்டுமே ஏழைகளின் ஏழ்மையைக் குறைக்க முடியும் என்றும் அமர்த்யா சென் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here