ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பது பற்றி சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கரிடம் ஆலோசிக்கப்பட்டதா? எதன் அடிப்படையில் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப்பட்டது என்று ஆணையம் விசாரிக்க முடிவெடுத்துள்ளது- இதற்காக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை வரும 18ந் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது- இதே போன்று முன்னாள் அமைச்சர் பொன்னையனும் வரும் 18ந் தேதியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மரணத்திற்கு நீதி வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்திய நிலையில், அந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரம் உள்ளதா? சிகிச்சையில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு இருந்ததா? என ஓ.பி.எஸ்சிடம் ஆணையம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்