முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ஆம் தேதியே இறந்து விட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, செப்.22ஆம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 75 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிசிச்சைப் பலனின்றி, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை (இன்று), மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார் என்றும், அப்போலோ மருத்துவமனை பாதுகாப்புக்காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். அப்பல்லோ குழுமத்துக்குச் சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் மறுநாள் 5ஆம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தததாகவும், தனக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வாங்கும் முயற்சியில் அவர் இருந்ததாகவும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here