மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று), தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, பேருந்து கட்டண உயர்வை அகற்றுவது குறித்து, திமுக சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை அவரிடம் வழங்கினார்.

stalin

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நிர்வாகம் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால்தான், எதிர் கட்சியான நாங்கள் நிர்வாகத்தை எப்படி சீரமைப்பது என்ற யோசனைகளை வழங்கியிருக்கிறோம். அதை படித்துப் பார்த்து, பரிந்துரைகளை நிறைவேற்ற முன் வந்தால் உள்ளபடியே நாங்கள் வரவேற்போம். ஒருவேளை, அலட்சியம் செய்தால், மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.” என்றார்.

பட்ஜெட் தாக்கலின்போது ஜெயலலிதா அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறந்திருப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்புவோம் என்றார். மேலும் அவர், “ஊழல் செய்து அதற்காக நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளியான அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால், இப்போது எங்கே இருந்திருப்பார்? பெங்களூரு சிறையில் முதல் குற்றவாளியாக சசிகலாவோடு இருந்திருப்பார்.” என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்