ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமை ஆக்கும் சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில்; வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் என்பது அவரது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் வந்ததாகவும், பாட்டி சந்தியா மரணத்துக்கு பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தன உறவினரான அத்தையான ஜெயலலிதா பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்குதான் நடத்தி வந்ததாகவும், இதனிடையே ஜெயலலிதா இறந்த பின்னர் தங்களை அறிவிக்க கோரி தானும் தன் தங்கையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும், அரசுடைமை ஆக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரம் இல்லை; ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகள் நாங்கள் இருக்கும் போது அதன் உண்மை நிலை தெரிந்துகொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழக அரசு சார்பில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.

அதாவது; அவசர சட்டத்துக்கு பதிலாக இந்த வேதா நிலையம் தொடர்பாக நாங்கள் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உங்களது நிலைப்பாட்டை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மக்கள் தொடர்பு துறை செயலாளர், இயக்குநர், மற்றும் சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here