ஜெயம் ரவி படத்திலிருந்து விலகும் தாப்ஸி – காரணம் இதுதான்

0
129


ஜெயம் ரவியின் 25 வது படத்தில் தாப்ஸி நாயகியாக நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

ஜெயம் ரவி கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 24 வது படமாகும். ஜெயம் ரவியின் 25 வது படத்தை அவரது அண்ணன் மோகன்ராஜா இயக்குவதாக இருந்தது. தனி ஒருவன் இரண்டாம் பாகமாக அது இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், சில காரணங்களால் மோகன்ராஜா ஜெயம் ரவியின் 25 வது படத்தை இயக்கவில்லை. அவரை வைத்து ரோமியோ ஜுலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹேnம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தாப்ஸி நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நடிக்கவில்லை. ஜெயம் ரவியின் 26 வது படத்தில் அவர் நடிக்கிறார். 25 வது படத்தில் நடிக்க நித்தி அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here