ஜெயமோகனை தவிர்த்த பாலா

0
37

பாலாவின் நான் கடவுள் படத்தின் கதை ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவலை அடிப்படையாகக் கொண்டது. அதன் வசனத்தையும் ஜெயமோகன் எழுதியிருந்தார். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரையும் மாற்றி மாற்றி தனது படங்களில் பயன்படுத்தி வந்த பாலா இந்தமுறை அவர்கள் இருவரையும் தவிர்த்திருக்கிறார்.

நாச்சியார் படத்தைத் தொடர்ந்து வர்மா படத்தை இயக்குகிறார் பாலா. தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான இதில் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு இயக்குனரும் எழுத்தாளருமான ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் அடுத்து ஜீவா நடிப்பில் ஜிப்ஸி என்ற படத்தை இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்