ஜெசிந்தா ஆர்டெனுக்கு இது இரண்டாவது முறை

With 72% of the vote counted, Ardern’s Labour Party had 49% support -- heading to its biggest share of the vote since the 1930s.

0
108

நியூசிலாந்துபொதுத் தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

நடைபெற்ற நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் 48.9 சதவிகித வாக்குகளைப் பெற்று தாராளவாத தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாகப் பிரதமராகிறார்.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர்  19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து  நாட்டின் பொதுத்தேர்தல் நான்கு வார காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நடப்பு பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்னின்  தொழிலாளர் கட்சியும், ஜூடித் காலின்ஸின் தேசியவாத கட்சியும் போட்டியிட்டன.

இந்நிலையில் 87 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி 48.9 சதவிகித வாக்குகளையும், தேசியவாத கட்சி 27 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இத்தகைய பெரும்பான்மையுடன் ஒரு கட்சி வாக்குகளைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, “அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.

மேலும், “ எனது அரசு ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பணியாற்றும் என நான் உறுதியளிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here