ஜூம் வழங்கும் புதிய அம்சங்கள்

From noise cancellation to PowerPoint presentation and a wide range of filters, the new Zoom update has several features for users

0
128

ஜூம் நிறுவனம் அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரைத் தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. ஜூம் நிறுவனத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் 21 அலுவலகங்கள் இருக்கிறது. உலகம் முழுக்க 18 தகவல் மையங்களையும் வைத்திருக்கிறது. தற்போது பெங்களூருவில் பிரத்யேக தொழில்நுட்ப மையத்தை அமைக்கவும் ஜூம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தற்சமயம் வெளிவந்த தகவலின்படி ஜூம் செயலியில் புதிய வீடியோ மற்றும் ஆடியோ அம்சங்கள் சேர்கப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில வசதிகளும் வந்துள்ளது.

அதன்படி தற்போதைய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ஃபில்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டுள்ளது.

இவை, விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.    

புதிய நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் உள்ளது. இவற்றை லே, மிட் மற்றும் ஹை என பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜூம் வீடியோ செட்டிங்களில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். 

இத்துடன் என்க்ரிப்ஷன் மற்றும் இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டது. கூகுள் மீட்ஸ் சேவையிலும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ள ஜூம் புதிய அம்சங்களை தற்போது, வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here