அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 22-ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.