ஜுலை 26 வருவாரா நயன்தாரா…?

நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் கொலையுதிர்காலம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். பல தடங்கல்கள். இந்தப் படத்தின் இந்திப் பதிப்பான காமோஷி வெளியாகி பெட்டிக்குள்ளும் முடங்கிவிட்டது. காமோஷியை சக்ரி டோலட்டி இயக்க தமன்னா, பிரபுதேவா நடித்திருந்தனர். ஜுலை 26 கொலையுதிர்காலம் வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அன்றாவது நயன்தாரா வெளிவருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷ் ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி

மலையாளத்தில் மாயநதி படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு வரத்தன் உள்பட பல படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்குகிறது. 

ஜெய்ப்பூர் செல்லும் சுந்தர் சி. மற்றும் விஷால் டீம்

சுந்தர் சி. இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் விஷால். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தமன்னா நாயகி. இன்னொரு நாயகியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடக்கிறது. அதற்காக விரைவில் சுந்தர் சி., விஷால் உள்ளிட்ட படக்குழு ஜெய்ப்பூர் செல்கிறது. ஹிப் ஹாப் தமிழா படத்துக்கு இசையமைக்கிறார்.

ரசிகர்களுடன் விக்ரம்

விக்ரமின் கடாரம்   கொண்டான் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார் விக்ரம். ரசிகர்கள் படத்துக்கு தந்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடாரம் கொண்டான் பிரெஞ்ச் திரைப்படம் பாயின்ட் பிளாங்கின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here